Breaking News
recent

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மூன்று பொறுப்பதிகாரிகள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக மூன்று பிரதான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான இரண்டு பிரதான அதிகாரிகளே இதுவரை கடமையாற்றி வந்தனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கடமையாற்றி வருவதுடன் அதற்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கடமையாற்றி வருகிறார்.

இவர்களுக்கு மேலதிகமாக திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான சுதத் நாகாஹமுல்ல, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடந்த சனிக்கிழமை முதல் கடமையாற்றி வருகிறார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.