Breaking News
recent

விடுதலைப் புலிகளுடனான போர்க்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வழக்கு இல்லை! - பிரதமர் ரணில்

விடுதலைப் புலிகளுடனான போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தொடர இடமளிக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பொல்பிதிகம தேசிய பாடசாலையின் புதிய கட்டடமொன்றை இன்று(16) திறந்து வைத்து உரையாற்றும் ​போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடத்தப்பட்டுக் காணாமல் ​போனோர் தொடர்பான பிரச்சினை இன்று முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

யுத்த முடிவின் பின்னரும், நல்லாட்சி அரசாங்கத்திலும் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பல்வேறு ஆணைக்குழுக்கள் செயற்படுத்தப்பட்டன. அத்துடன் பலவந்தமான ஆட்கடத்தல்களுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தில் இலங்கை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே கைச்சாத்திட்டது.அதன் 13-6 ஆவது சரத்தில் குறித்த சமவாயத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்ட தினத்தில் இருந்தே அச்சட்டம் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அதனைக் கொண்டு யுத்த காலத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்த முடியாது.

அத்துடன் போர் நடைபெற்ற காலத்தில் பெருமளவான கடத்தல் சம்பவங்கள் விடுதலைப் புலிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டன.ஒரு சில தனியார் குழுக்களும் அவ்வாறு செயற்பட்டன. பின்னர் அவர்கள் அவையனைத்தையும் இராணுவத்தினர் மீது சுமத்தினார்கள்.ஆனால், விடுதலைப் புலிகளே கூடுதலான ஆட்கடத்தல்களை மேற்கொண்டிருந்தார்கள்.பலவந்தமான ஆட்கடத்தலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு கடந்த காலத்தில் நடைபெற்ற எந்தவொரு சம்பவத்தையும் விசாரிக்கவோ தண்டனை வழங்கவோ முடியாது.

ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்துக் கொள்ள முடியும்.அதே ​நேரம் போர்க்காலத்தில் நடைபெற்ற எந்தவொரு சம்பவம் குறித்தும் சர்வதேச ரீதியிலும் எந்தவொரு வழக்கும் தொடுப்பதற்கு ஜனாதிபதியோ, நானோ, அரசாங்கமோ இடமளிக்கப் ​போவதில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.