Breaking News
recent

காதலுக்கு உதவும் நோக்கத்திலேயே சென்றேன், இவ்வாறு கொலை செய்வார்கள் என நினைக்கவில்லை: வித்தியா வழக்கில் மாப்பிள்ளை சாட்சியம்!

யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் வெளியில் கூறினால் மாணவியை கொலை செய்ததைப் போன்றே தன்னையும் தனது குடும்பத்தாரையும் கொலை செய்வோம் என கொலையாளிகள் மிரட்டியதால், உண்மையை வெளியில் கூறவில்லையென, சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


துஷாந்த் என்பவரின் காதலுக்கு உதவும் நோக்கத்திலேயே தான் அவர்களுடன் சென்றதாகவம், இவ்வாறு கொலை செய்வார்கள் என தான் நினைக்கவில்லையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


வித்தியா கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கு தொடுனர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நேற்றைய தொகுப்புரையின் முழுமையான வடிவம் வருமாறு…

சட்டத்தரணிகள் முன்னிலை வழக்குத் தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

எதிரிகள் தரப்பில் 1ம், 2ம், 3ம், 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி லியனகே ஆகியோரும், 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும், 4ம், 7ம் மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோரும் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையானார்.

எதிரிகள் ஆஜர்படுத்தப்பட்டனர் எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரஹாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கேட்டில் திருத்தம் முதலில் வழக்கேட்டில் சில திருத்தங்கள் செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார். அதனை அடுத்து திருத்தங்கள் செய்வதற்கு மன்று அனுமதித்தது. அதன் பிரகாரம் பிரதி சொலிஸிடர் ஜெனரல் குமார் இரட்ணம் சில திருத்தங்களை தெரிவித்தார்.அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும் சில திருத்தங்கள் செய்வதற்கு மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து அவரும் சில திருத்தங்களை செய்தார்.

அதனை தொடர்ந்து வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தொகுப்புரையை ஆரம்பித்தார்.எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வித்தியா எனும் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.