Breaking News
recent

தியாக தீபம் திலீபனின் 30 ஆவது நினைவு நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (15-09-2017) வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


குறித்த நினைவு நாள் அஞ்சலி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடத்தப்பட்டுள்ளது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இணைந்து இந்த நினைவுகூரலை நடத்தியுள்ளனர்.

இந்த நினைவுகூரலில் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.






Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.