Breaking News
recent

தீவக மாணவி வித்தியா கொலை வழக்கு - எதிர்வரும் 27ஆம் திகதி இறுதி தீர்ப்பு !



யாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.


இதையடுத்து இன்று எதிரிதரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.