Breaking News
recent

விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுக்கும் இடையில் துப்பாக்கி சூடு! - நீர்கொழும்பில் பரபரப்பு



நீர்கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நீர் கொழும்பு குறன என்ற பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் வந்த இனந்தெரியாத குழுவினர் விஷேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விபரம் எதையும் பொலிசார் வெளியிடவில்லை….
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.