Breaking News
recent

ஆவா குழுவிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் தொடர்புள்ளதா?



வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆவா குழுவினருக்கு நிதியளிக்கும் தனிநபர்களோ அல்லது குழுக்களையோ கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறையினர் இக்குழுவினரோடு தொடர்பிலுள்ளார்களா என்பது தொடர்பாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்குழு தொடர்பாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு தனியான விசாரணையை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையின்படி, மூன்று வாள்கள், ஒரு கத்தி, ஒரு உந்துருளி உட்பட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.