Breaking News
recent

மாணவிகளுடன் நெருக்கமாக புகைப்படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட ஆசிரியர்.!

அசாம் மாநிலம், ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஹட்லிசேரா என்னும் ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஃபெய்சுதீன் லஷ்கார்.

இவரது பள்ளியில் படிக்கும் மாணவிகளுடன் வகுப்பறையில் நெருக்கமாக நிற்பது போன்று பல புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆசிரியரை கைது செய்யவில்லை.

இதனால் மாணவிகளின் பெற்றோரும் கிராம மக்களும் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

மேலும், அந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட ஆசிரியரின் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.