Breaking News
recent

நல்லூருக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கலாச்சார ஆடையில் வருமாறு வேண்டுகோள் - யாழ் மாநகர ஆணையாளர்!



யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழாக் காலம் குறித்து மாநகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் ஊடகங்களுக்கு  சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“இவ்வாறான உற்சவ நாட்களில் மிகவும் புனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும். இதற்கு யாழ். நல்லூர் மாநகரசபை இயலுமான உதவிகளை வழங்கி வருகின்றது.

இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கலாச்சார ஆடையில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். ஆண்கள் வேட்டி சட்டையுடனும், பெண்கள் சாரியுடனும் வருவது வரவேற்கத்தக்கது.

ஆலயத்திற்குள்ளே செல்ல வேண்டுமாயின் ஆண்கள் தங்களுடைய மேற்சட்டை இல்லாமல் வர வேண்டும். இது தொடர்பிலான அறிவித்தல் பலகைகள் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே மக்கள் இவற்றை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” என மாநகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன்  தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.