Breaking News
recent

குடும்பம் ஒன்றை கொலை செய்ய மர்ம நபர் செய்த காரியம்!!

குருநாகல் - கும்புக்கெட்ட - கிரிபமுன பிரதேசத்தில் கடையொன்றின் அறையில் வசித்து வந்த குடும்பத்தை கொலை செய்வதற்காக காட்டியில் இருந்து பிடிக்கப்பட்ட கொடிய விஷ பாம்பை பயன்படுத்திய சந்தேக நபர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த அறையில் வயதான கணவன், மனைவியும் அவரது மகளும் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவில் இந்த சந்தேக நபர் இந்த பாம்பை பிடித்து வந்து கடையில் முன்னால் உள்ள கதவிற்கு அருகில் போட முற்பட்ட போது அதனை கண்ட வயதான பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் பாம்பை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த பிரதேச மக்கள் தப்பியோடிய சந்தேக நபரையும், பாம்பையும் பிடித்து கும்புக்கெட்ட காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் காவற்துறையினர் அந்த பாம்பை மருத்துவர்களிடம் காட்டிய போது அது கொடிய விஷப் பாம்பு என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் காட்டிலிருந்து விஷப் பாம்புகளை பிடித்து அவற்றை தாக்கி கோபப்படுத்தி அந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் கொண்டு வந்து விட்டு வினோதமடைவதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் அந்த பிரதேசத்தில் அண்மையில் இரண்டு சிறு பிள்ளைகளை விஷ பாம்பு தீண்டியுள்ள நிலையில், அதனுடன் குறித்த நபர் தொடர்பு பட்டுள்ளாரா என கண்டறியவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.