Breaking News
recent

வடகிழக்கு தமிழ் மக்களை திட்டமிட்டு மஹிந்த பழிவாங்கினார் : விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு


- கோப்பு காட்சி

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கத்தின் இரண்டு கட்சிகளுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம் என சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து ஸ்ரீலங்காவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ததாக வெற்றிக் கொண்டாட்டங்களில் குதூகலித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பழிவாங்கியதாக விஜயகலா மகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் கீழ் வடக்கில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையக்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண மக்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.