Breaking News
recent

துன்னாலை சுற்றிவளைப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு



யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்கள் சிலரின் உறவினர்கள், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட தமது உறவினர்கள் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற கலவரங்களிலும் மணல் கடத்தலிலும் ஈடுபட்டிருக்கவில்லை என தெரிவித்து முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

பருத்தித்துறை – மணற்காடு, ஆறாம் கட்டை பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற கென்டர் வாகனம் மீது கடந்த 9 ஆம் திகதி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

துன்னாலை – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரொருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

இதன்போது பொலிஸ் காவலரண் தாக்கப்பட்டதுடன், டயர்கள் எரிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவங்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சுற்றிவளைப்பின் போது துன்னாலை பகுதியில் மாத்திரம் 24 பேர் கைது செய்யப்பட்டதுடன், வடமராட்சி முழுவதும் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.