Breaking News
recent

பொலிஸ் அதிகாரிகள் 58 பேர் இடமாற்றம்


உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்களாக, 58 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம்  அறிவித்துள்ளது.


பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைவாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மேற்படி 58 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 21 பேர், பொலிஸ் பரிசோதகர்கள் 32 பேர் உள்ளடங்குவதாக பொலிஸார் தலைமையகம் அறிவித்துள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.