Breaking News
recent

கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு மட்டக்களப்பில்



வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் படு­கொ­லை­ செய்­யப்­பட்ட தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் தலை­வர் குட்­டி­மணி மற்­றும் தள­பதி தங்­க­துரை உட்­பட 53 அர­சி­யல் போரா­ளி­கள் உட்­பட படு­கொலை செய்­யப்­பட்ட மக்­களை நினைவு கூரும் கறுப்பு ஜுலை நினை­வேந்­தல் நிகழ்வு மட்­டக்­க­ளப்­பில் நடை­பெற்­றது.

தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தின் (ரெலோ) ஏற்­பாட்­டில், மட்­டக்­க­ளப்பு ஊற­ணி­யி­லுள்ள அமெ­ரிக்க மிஷன் மண்­ட­பத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை இந்த நிகழ்வு நடை­பெற்­றது.

கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கோவிந்­தன் கரு­ணா­க­ரம் தலை­மை­யில் இந்த நிகழ்­வில், ரெலோ இயக்­கத்­தின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தலைமை அதி­தி­யா­கக் கலந்­து­கொண்­டார்.

இதில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான மா.நட­ராஜா, இரா.துரை­ரெட்ணம், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வினோ நோக­ரா­த­லிங்­கம், கட்சி முக்­கி­யஸ்­த ர் ­கள் எனப் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

Powered by Blogger.