Breaking News
recent

யாழ் மாநகரசபைக்கு உற்பட்டவர்களா...! உங்களுக்கு ஓர் அறிவித்தல்

யாழ். குடாநாட்டில் மாநகர சபைக்குற்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு மாநகர சபை அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

குறித்த பகுதியில் இருப்பவர்கள் தமது வீட்டு கழிவுநீரினை வெள்ளை வாய்க்கால்கள் விடுவதை உடனடியாக தவிர்த்துக்கொள்ளுமாறும் அதனை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் தமது வீட்டின் கழிவுநீர்களை வீடுகளில் உள்ள நிலத்தடி தொட்டிகளை அமைத்து அதற்குள் விடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களில் கழிவுநீரினை விடுவதால் சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது.

இவ்வாறு செல்லும் நீரானது குளங்கள் மற்றும் ஏரிகளில் சென்று கலப்பதால் நன்னீர் மாசடைவதாக கூறப்படுகின்றது.

அத்துடன் யாழ் நகர்ப்பகுதி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ளவர்கள் நிலத்தடி தொட்டிகள் அமைப்பதற்கு இடவசதியின்மையால் வீட்டு கழிவு நீரினை வாய்க்காலில் விட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.