Breaking News
recent

மகுடாராமய பர்மா விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட ஏழு மாடி கட்டிட திறப்புவிழா ஜனாதிபதி தலைமையில்



தெமட்டகொட, மகுடாராமய பர்மா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏழு மாடி கட்டிட திறப்புவிழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.


விகாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்ற பின்னர் நினைவு படிகத்தை திரைநீக்கம் செய்து, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



இந்த கட்டிடம் மதகுருமார்களுக்கான வதிவிட வசதி மற்றும் தானசாலை உள்ளடங்கலாக அமைக்கப்பட்டுள்ளது.



மகுராகொட விகாராதிபதி வண. கித்திசார நாயக்க தேரர் உள்ளிட்ட விகாரை முகாமைத்துவ குழுவின் ஆலோசனைக்கமைய பர்மீய பௌத்த அடியார்களின் நிதி அன்பளிப்புடன் இப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



கட்டிடத்துக்கான நிதியுதவி செய்த பர்மீய நாட்டு அடியார்களுக்கான பாராட்டுப் பரிசு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் அதிவண. தவுல்தன ஞாணீஸ்ஸர தேரர் , வண. கொட்டுகொட தம்மாவாஸ தேரர், வண. பலாங்கொட சோபித தேரர், ரங்கூன் நகரின் பிரிவெனா பணிப்பாளர் வண. பதந்த தம்மாநந்த தேரர் மற்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும், பௌத்த துறவிகளும் கலந்து கொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.