Breaking News
recent

இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி விநியோகம்

சாலியவெவெ பிரதேசத்தில் உள்ள ராஜங்கனை தென்பகுதியின் 13ம் 14ம் வலயங்களில் வசிக்கும் மக்களின் நன்மைகருதி மருத்துவ சிகிச்சை ஒன்று இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்பட்டது.


இலங்கை இராணுவத்தின் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் அண்மையில் தனியார் கண்சிகிச்சை நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில் குறித்த பிரதேச மக்களின் கண் பரிசீலிக்கும் வகையிலான நடமாடும் கண் சிகிச்சை முகாம் கலாஓயா ஸ்ரீ விஜய போதிராஜராமைய விகாரையில் இடம்பெற்றது.


இந்த கண் சிகிச்சை முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் தமது பார்வைக் குறைபாட்டினை பரிசீலித்து அவர்களில் 384 பேருக்கு மூக்குக் கண்ணாடி விநியோகிக்கப்பட்டது.


இதேவேளை கண் வில்லைகள் மாற்றுதல் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டதுடன் அவர்களின் சிச்கிச்சைக்கான நிதி அனுசரணைக்கு நாரம்மல ஜூப்ளி லயன்ஸ் கழகம் முன்வந்துள்ளது.


சிச்கிச்சை ஆரம்ப நிகழ்விற்கு அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வருகைதந்திருந்தனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.