Breaking News
recent

விடுதலைப்புலிகள் இல்லையென்று அர்த்தம் இல்லை...!- மு.தம்பிராசா



ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதால் விடுதலைப்புலிகள் இல்லையென்று அர்த்தம் இல்லை.


தமிழர்களின் எதிர்ப்பினை சுமந்திரன் விரும்பியோ விரும்பாமலோ சம்பாதித்துக் கொண்டுள்ளதாக அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார்.


யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரித்துவிட்டனர்.


சுமந்திரன் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர்களென கைதானவர்கள் எதற்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை.


சுமந்திரனின் அரசியலில் மாற்றம் ஏற்படும் வரை அவருக்கு எதிராக எதிர்ப்பலைகள் குறையாது. ஆனால் இவர்கள் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும்.


ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதால் விடுதலைப்புலிகள் இல்லையென்று அர்த்தம் இல்லை. இலங்கை அரசிற்கு ஜ.நாவில் கால அவகாசம் வழங்கும் விடயம் தொடர்பில் மீண்டும் ஒரு முறை கூட்டமைப்பினர் சிந்திக்கவேண்டும்.

உண்மையில் தேசிய தலைவரின் நிழல் படர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எஞ்சியிருப்பது சிவசக்தி ஆனந்தனே.


இவ்வாறு தனியொருவனாக நின்று போராடி சிவசக்தி ஆனந்தனிற்கு மக்கள் காலத்தால் அழியாத நினைவுகளை வழங்குவார்களெனவும் தெரிவித்தார்.

மக்களது அணிதிரண்ட வெகுஜனப்போராட்டங்களே உண்மையான நிலைப்பாட்டை கூட்டமைப்பினருக்கு விரைவில் தெளிவுபடுத்தும்.

இதனிடையே கூட்டமைப்பினரது இரட்டை வேடம், நிச்சயம் மக்களிடையே தெரியவந்து, அவர்களை புறக்கணிப்பதற்கான சூழலும் ஏற்படுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.