Breaking News
recent

இலங்கையில் தமிழின படுகொலை..! தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : இயக்குனர் கௌதமன்


ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் வரும் மார்ச் 22 ஆம் திகதி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை காப்பாற்ற முயற்சி செய்தால் அதற்கு இந்தியா எதிராக செயற்பட வேண்டும் என இயக்குனர் வ.கௌதமன் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார்.


தமிழர் உரிமைக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பினர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சார்பில் தனிச்செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்க செயற்படும் பட்சத்தில் இலங்கை சிங்கள அரசை " சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் " நிறுத்தவும், சர்வதேச விசாரணை மேற்கொள்ளவும் தீர்மானம் கொண்டுவர தமிழக அரசு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

" பொதுச்சபைக்கும் - பாதுகாப்புச்சபைக்கும் " பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக இது உள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவாறானதொரு கோரிக்கை மனுவானது இன்று காலை 11 மணியளவில் , சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகளை சந்தித்து இயக்குனர் வ.கௌதமன் கையளித்திருந்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.