Breaking News
recent

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தின மாநாடு இன்று ஜனாதிபதி தலைமையில்



சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் இன்றாகும்.


இதனை முன்னிட்டு நுகர்வோரின் நம்பிக்கையை உத்தரவாதப்படுத்தும் டிஜிற்றல் உலகை நோக்கி என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.



இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் இடம்பெறும்.



இன்றைய தினத்தில் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதனை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபை விசேட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.



அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜோன் எவ்.கெனடி 1962ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி நுகர்வோர் உரிமைகளுக்கான பிரத்தியேக தினமொன்று அவசியம் என குறிப்பிட்டார். அவர் அமெரிக்கக் காங்கிரசில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய 1983ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி தொடக்கம் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்படத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.