Breaking News
recent

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை மாணவர்கள் ஆதரவு



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் நடத்தும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 26 வது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில், இன்று யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவப் பிரிவு மாணவர்கள் தமது ஆதரவை வழக்கும் முகமாக கந்தசுவாமி ஆலயம் முன்றலில் நடைபெறுகின்ற போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினை வழங்கி உள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிற்கான மகஜர் ஒன்றினை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனியிடம் கையளித்தனர்.

இப்போராட்டத்திற்கு தீர்வு விரைவில் கிடைக்க வேண்டும் எனவும் தீர்வு கிடைக்கும் வரை தமது ஆதரவு இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.