Breaking News
recent

சதஹம் யாத்ரா 23வது தர்மபோதனை உனகலாவெஹெர ரஜமகா விகாரையில்...

சதஹம் யாத்ரா தர்மபோதனைத் தொடரின் 23வது தர்மபோதனை வரலாற்றுப் புகழ்மிக்க உனகலாவெஹெர ரஜமகா விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.


ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நாட்டிலுள்ள முதன்மையான விகாரைகளை மையப்படுத்தி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சதஹம் யாத்ரா தர்மபோதனைத் தொடரின் 23வது தர்மபோதனை நேற்று ஹிங்குரன்கொட வரலாற்றுப் புகழ்மிக்க உனகலாவெஹெர ரஜமகா விகாரையை மையப்படுத்தி இடம்பெற்றது.


பொலன்னறுவை மாவட்டத்தின் உப பிரதான சங்கநாயக்கர், ஹிங்குரன்கொட சாசன பாதுகாப்பு சபையின் தலைவர் உனகலாவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. கிரிதலே ஞானீஸ்ஸர நாயக்க தேரரின் ஆலோசனைப்படி இந்த புனித நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


'எழுச்சிபெறும் பொலன்னறுவை ரஜரட்ட நவோதயம்' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உனகலாவெஹெர விகாரையின் புனித தந்தங்களும் ஜனாதிபதியினால் இதன்போது பிரதிஷ்டை செய்யப்பட்டது.


பொலன்னறுவை பழைய நகரத்திற்கு வடக்கில் அமைந்துள்ள அனுராதபுரம் முதலாவது யுகத்திற்குரியது எனக் கருதப்படும் உனகலாவெஹெர தொல்பொருள் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான இந்த விகாரையின் புனரமைப்புப் பணிகள் ஜனாதிபதியின்; பணிப்புரையின்படி தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் ஜயந்தி சிறிசேன அம்மையார்; தர்மபோதனைகளை செவிமடுப்பதற்காக இணைந்து கொண்டதுடன், அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டிய, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ. திசாநாயக்க, முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலொன்னே உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.

Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.