Breaking News
recent

காணிவிடுவிப்பு,மீள்குடியேற்றம்,காணாமல்போனோர்விடயம்,அரசியல் கைதிகள் விடயங்களை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் வலி.வடக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறும் கோரி மக்கள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்ட செயலகம் நோக்கி முன்னெடுக்கப்பட்டது.


இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம்,
இந்த போராட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.


பெரும்பான்மையின மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று இராணுவத்தினரே காணிகளை விட்டு வெளியேறி மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி கோசம் எழுப்பினர்.

நன்றி படங்கள்.-- Yarl Theepan
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.