Breaking News
recent

அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு அத்தியாவசியமானது – ஜனாதிபதி

அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு அத்தியாவசியமான விடயமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மத்திய வங்கி வளாகத்தில் இன்று ஆரம்பமான நிலையான நிதி முறைமை பற்றிய செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.


சகல நாடுகளும் நிலையான அபிவிருத்தி பற்றிய அடிப்படை வழிகாட்டலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.


சுற்றாடலை பாதுகாக்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வது அவசியமாகும். அரசாங்கம் இந்த வருடத்தை வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறுவோர் மீது அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது. அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சுற்றாடலை பாதுகாப்பதும் அவசியமாகும்.


இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தமைக்காக ஜனாதிபதி மத்திய வங்கிக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.