Breaking News
recent

ஹம்சிகா படுகொலை வழக்கு: சாட்சியமாக இருக்கும் சிறுவனுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல்

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில் பொலிஸ் பாதுகாப்பில் சாட்சியமாக இருக்கும் சிறுவனின் உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனது மகனுக்கு மீண்டும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்துறை ஊரணிப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஹம்சிகா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில், 12 வயதான சிறுவன் ஒருவனின் சாட்சியத்தின் அடிப்படையில், இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போதும் குறித்த சிறுவன் சந்தேக நபர்களை அடையாளம் காட்டியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த சிறுவனை கழுத்தை வெட்டுவேன் என சைகை மூலம் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தினை அன்றைய தினமே தன்னிடம் தெரிவித்ததாகவும், தற்போது மகனின் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரை தனது வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது தனது மகனின் உயிரை பாதுகாக்கும் பொறுட்டு சிறுவர் இல்லத்தில் தங்க வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களில் சிறுவனுக்கு இருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் சிறுவனுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.