Breaking News
recent

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை! சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 5 பொலிஸாரையும்எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுயாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளர்.

யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ம்திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட கலைப்பீடமாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பொலிஸாரினால் சுடப்பட்டு உயிரிழந்தனர்.


குறித்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில்விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.


விசாரணையின் போது, குறித்த 5பொலிஸாரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில்வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.