Breaking News
recent

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றுகின்றது: பந்துல குணவர்தன



பிரதமர் ரணில் விக்ரமசிங்க அபிவிருத்தி தொடர்பாக புகைப்படங்களை காண்பித்து ஜனாதிபதியை ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றி வருகின்றதுடன், குளியாப்பிட்டியில் வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் உற்பத்திசாலையை அமைத்து 300,000 பேருக்கு தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக அரசாங்கம் பிரசாரம் செய்திருந்தது.

இவ்வாறான போலியான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.