Breaking News
recent

யாழில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்பு

வலி.வடக்குப் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீமன்காமம் வடக்குப் பகுதியில் தனியார் காணியொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பின்னர், மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட பகுதியாகும்.

இந்நிலையில் காணியின் உரிமையாளர்கள் துப்பரவு செய்த வேளையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மீளக்குடியமரும் நோக்கில் தமது காணிகள் கிணறுகள் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டு வருகி்றனர்.

இதன்போது கிணற்றை சுத்தம் செய்த வேளையில் வெடிபொருட்களை இருந்ததாகவும், இச்சம்பவம் குறித்து காங்கேசன்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் குறித்த வெடிபொருட்களை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களில் செஷ்கள், குண்டுகள், ரவைகள் என ஏராளமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.