Breaking News
recent

யாழ். பேருந்து நிலையத்தில் ரணிலின் உருவபொம்மை எரிப்பு..!

மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று (07 ) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பேருந்து நிலையத்தில் நேற்று  கையெழுத்து போராட்டம் ஒன்று அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் வைத்தியபீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது நாட்டில் "தற்போது இலவசக் கல்வி, சுகாதாரம் இருக்கின்றதா", "எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்", எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் விநியோகிகக்கப்பட்டன.

இந்நிலையில், போராட்டத்தின் நிறைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாலபே பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளை பகுதியில் நேற்று  முன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதும் பிரதமரின் கொடும்பாவி எரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.