Breaking News
recent

"நான் யாழ் செல்வதற்கு முன் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்" - ஜனாதிபதி கண்டிப்பு..!

எதிர்வரும் 4 ஆம் திகதி நான் யாழ்ப்பாணம் செல்கின்ற போது கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நான் யாழ் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என பதில் பாதுகாப்பு செயலாளர் , விமானப்படை தளபதிகளுக்கு இரா.சம்பந்தன் முன்னிலையில் கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேற்கூறியவாறு ஜனாதிபதி தமக்கு உறுதிமொழி வழங்கியதாக ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.