Breaking News
recent

மயக்க மருந்தேற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை - ஜனாதிபதி

நாட்டில் சுகாதாரத்துறையில் பாரிய பிரச்சனையாகவுள்ள மயக்க மருந்தேற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


சார்க் பிராந்திய நாடுகளின் மயக்க மருந்தேற்றும் மருத்துவர்கள் சங்கத்தின் 12ஆவது பொதுக்கூட்ட ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பு நெலும் பொக்குன னெ;ற தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்துகாண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.


மயக்க மருந்தேற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சத்திர சிகிச்சை தாமதங்களால் பல இன்னல்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி;, இது தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.


பொதுச்சபைக் கூட்டம் சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த 400 வரையிலான மருத்துவர்களின் பங்குபற்றுதலுடன் 26ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறுகின்றது.


பிரித்தானிய மயக்க மருந்து ஏற்றும் மருத்துவர்கள் சங்கத் தலைவர் றுடைடயைn ர்யசசழற புசளளiவா இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார்.


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை மயக்க மருந்தேற்றும் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கனிஷ்க இந்திரரத்ன ஆகியோர்; இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.