Breaking News
recent

யாழ். குப்பிளானில் விபத்து : உயிர்தப்பிய சிறுமி, வயோதிபப்பெண் கவலைக்கிடம்

யாழ். குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப்பெண் ஒருவர் படுகாயமடைந்ததுடன், சிறுமி ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

குறித்த விபத்து குப்பிளான் சந்திக்கருகாமையில் நேற்று பிற்பகல் 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

குப்பிளான் சந்திக்கருகாமையில் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வயோதிபப்பெண்ணை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கடுமையாக மோதியதில் அவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்மணியுடன் வந்த சிறுமி இடப்பக்கமாக நடந்து சென்ற காரணத்தால் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினார்.



இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபரும் காயங்களுக்குள்ளான நிலையில் உடனடியாக அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்துக்குள்ளான பெண்ணை இரு இளைஞர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் அனுமதித்தனர். குறித்த பெண்மணியின் பின்பக்கத்தின் ஒரு பக்க மூளை வெளியில் வந்த நிலையில் தற்போது கோமா நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் சென்று விசாரணை நடாத்தியதுடன், சற்று முன்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.