Breaking News
recent

கேப்பாப்புலவு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ். மாணவர்கள்



கேப்பாப்புலவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களிற்கு ஆதரவு வழங்கும் வகையில் வடமாகாண பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் வடமாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் இன்று காலை 7.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கேப்பாப்புலவில் விமானப்படையினரின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை மீளக்கையளிக்குமாறு மக்கள் கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.