Breaking News
recent

போட்டிக்கு மட்டும் முகங்கொடுக்கும் தற்போதைய சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒரேயொரு வழி சமய கோட்பாடுகளே – ஜனாதிபதி

மனிதாபிமானம், கருணை மட்டுமன்றி நற்பண்புகளையும் இல்லாமற்செய்து போட்டிக்கு மட்டும் முகங்கொடுக்கும் தற்போதைய சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒரேயொரு வழி சமய கோட்பாடுகளே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


இளம் தலைமுறையினரை வழிபாட்டு நிலையங்களுக்கு ஈர்த்து சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சமயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக ஒன்று சேர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


இரத்தினபுரி கணேகம அரமணபொல ரஜமகா விகாரையின் பொன்வேலி மற்றும் அட்டவிசி விகாரையை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,


அனைத்து விகாரைகளிலும் ஆத்மீக ஆறுதலை வழங்கி சுகப்படுத்தலே மக்களுக்கு வழங்கப்படுவதனால் இந்த வழிபாட்டிடங்கள் விகாரைகளில் புதிதாக இணைதலானது விகாரைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கம் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு பலமாக இருக்குமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


இரத்தினபுரி – பெல்மடுளை நெடுஞ்சாலையை நோக்கியதாக சிறிய மலையொன்றில் அமைந்துள்ள கணேகம ரஜமகா விகாரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது.


அனுராதபுர ஜய ஸ்ரீபோதியைப் போன்ற அரச மரம் இந்த விகாரையில் வியாபித்தள்ளதுடன், தற்போதுள்ள தெதிஸ்பல போதிகளில் மிகப் பெரியதாகவும் காணப்படும் சாத்தியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி மதவழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். விகாராதிபதி வண. பாதகட விமலரத்ன தேரரும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்பின்னர் நடைபெற்ற நிகழ்வில் அதிவணக்கத்துக்குரிய வறக்காகொட ஞானரத்ன தேரர் வழிபாடுகளை நடத்தினார்.


இந்த நிகழ்வில் அதிவணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர், அதிவணக்கத்தக்குரிய பெங்கமுவே தம்மதித்த நாயக்க தேரர் உள்ளிட்ட மதகுருமார்களும், அமைச்சர் தலதா அத்துகோரள, பிரதி அமைச்சர்களான துனேஸ் கன்கந்த, கருணாரத்ன பரணவிதான, சப்ரகமுவ மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.