Breaking News
recent

ஹர்தாலால் குழம்பிய மக்கள்.- கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு பற்றி ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு சந்திப்பு.


காணிவிடுவிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாக வடக்கில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தாலென பரவிய வதந்தியால் மக்கள் பரபரப்புக்குள்ளாகினர்.

மேற்படி விடயம் என்பதை உறுதிப்படுத்த குடாநாட்டின் பல பகுதியிலிருந்தும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் என பலரதரப்பினரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை ஊடக அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டவண்மிருந்தனர்.


நில மீட்பு தொடர்பிலான போராட்டங்கள் ஒரு மாதம் எட்டும் நிலையில் அரசாங்கத்திடமிருந்து ஒரு பதிலும் இல்லாத நிலையில் இதற்கு ஆதரவாக வடக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பது குறித்து தீர்மானிப்பபட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் ரி. ரவீகரன் அறிவித்திருந்தார் எனினும் அரசுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் இதன் பின்னர் ஹர்த்தால் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஜனாதிபதியை கூட்டமைப்பினர் சந்தித்து கேப்பாபிலவு மக்களின் காணிவிடுவிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இச்சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சி துணைத் தலைவர் மாவை. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.