Breaking News
recent

யாழ்ப்பாண வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது



யாழ்ப்பாண வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அரசடி வீதியில் வாள்களைக் கொண்டு நபர்களைத்தாக்கியதுடன் வர்த்தக நிலையமொன்றை சேதப்படுத்திய வாள் வெட்டுக் கும்பலின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களுடன் நான்கு வாள்கள், ஒரு கைக்கோடாரி, கூரிய ஆயுதமொன்று, ஒரு மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.