Breaking News
recent

தீ பட்டு எரிந்த பெண் 2 வாரங்களின் பின் பலி

பூஜை அறையின் விளக்கின் தீ பட்டு படுகாயமுற்ற பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை மேற்கை பிறப்பிடமாக சேர்ந்த காசிநாதன் சிவசோதி என்ற 66 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடந்த 3ம் திகதி பூஜை அறையில் உள்ள விளக்கின் தீயை வழிபாடுகளின் பின்னர் கையால் அணைக்க முற்பட்டுள்ளார். இதன் காரணமாக குறித்த தீ அவரின் ஆடையில் படவே தீ பற்றி எரிந்துள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவர்கள் குறித்த தீயை அணைத்து வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது 14 நாட்கள் முடிந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ். வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.