Breaking News
recent

ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயம்; சீரற்ற காலநிலையால் இடைநடுவில் கொழும்பு திரும்பினார்



முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், மழைதொடர்வதால் சீரற்ற வானிலை காரணமாக தரையிறக்குவதில் ஏற்பட்ட சிக்கலினால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளார். .

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்று இடம்பெற்று வருகின்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விஜயம் இடைநடுவில் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.


முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெறும் பொது நிகழ்வில் பாடசாலைக் கட்டிடத் திறப்புடன் மாவட்டத்தின் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்படுவதுடன் 500 குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் கேப்பாபுலவில் விடுவிக்கப்படும் நிலங்களிற்கான சான்றிதழ்கள் போன்றன வழங்கி வைக்கப்படவிருந்தது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி வராத போதிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.