Breaking News
recent

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை யாழில் எழுச்சியாக கொண்டாடிய யாழ் எம்.ஜி.ஆர்


தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை இன்று (17-01-2017) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தி சந்தைவளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்பாக இந்திய துணை தூதுவர் திரு.ஏ.நடராஜா தலைமையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.


மக்கள் திலகம் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபஆராதனை காட்டப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது.


யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜிஆரின் தீவிர இரசிகனான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஈழ நல்லூர் எம்.ஜி.ஆர் நற்பணிமன்ற உறுப்பினர்களும் என பலரும் கலந்துக்கொண்டனர்.


இதன்போது, மக்கள் திலகம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வறுமைக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட சுமார் நூறு பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டும், இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டும் மாற்றுத்திரனாளிகளுக்கு சிறுபண உதவியும் வழங்கி எம்.ஜி.ஆரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர் மக்கள் திலகத்தொண்டர்களால் எழுச்சி பாடல்கள் இசைக்கப்பட்டன.



மின்னல் பிரதான  செய்தியாளர் யாழ்ப்பாணம்.

தங்கராசா ஷாமிலன்.













Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.