Breaking News
recent

கண்ணீரோடு விடைபெற்றார் ஹம்சிகா..!



யாழ். ஊர்காவற்துறையில் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெற்ற நிலையில், அந்தப்பகுதியே சோகமயமானது.

யாழ். ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்து 7 மாத கர்ப்பிணி பெண் ஹம்சிகா கடந்த 24ஆம் திகதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதன் காரணமாக மூளை சிதைவடைந்து அவர் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் நான்கு வயதுடைய பெண் குழந்தைக்கு தாய் என்பதுடன், அவர் படுகொலை செய்யப்பட்ட போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.