Breaking News
recent

போலி நாணயத்தாள்கள் அச்சிட்டு வந்த கும்பல் கைது! வடமராட்சியில் சம்பவம்!



வடமராட்சிப் பகுதியில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டு அதனைப் புழக்கத்தில் விட்டு வந்த கும்பல் ஒன்றினை நெல்லியடிப் பொலிஸார் ஆதாரங்களுடன் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வல்லைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட சமயம் நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நெல்லியடி பொலிஸ் உப பரிசோதகர் கே.விமலவீர தலைமையில் எஸ்.ஜெகதீஸ்வரன், ஏ.அஜித், ஜே.டென்சிராஜ், பெரெரா ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவர் பழைய வேதக்கோயிலடி இலக்கணாவத்தையைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் எனவும் மற்றைய நால்வரும் வன்னிச்சை அம்மன் கோயிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 17, 18, 21, 25 வயதுகளையுடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தொடர்ச்சியாக இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய கணனி, பிரதியாக்கல் இயந்திரம், போலி நாணயத்தாளினை அச்சிட்டு வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகள் என்பன வன்னிச்சை அம்மன் கோயிலடியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்போலி நாணயத் தாள்களை அச்சிட்டு புழக்கத்தில் விடும் பிரதான நபர் கொழும்பில் இருந்து வடமராட்சிக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படும் நிலையில் அவர் இன்றைய தினம் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Valampuri
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.