Breaking News
recent

தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தட்டிக்கழித்தார் பிரபாகரன்..! - டக்ளஸ் தேவானந்தா



தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் அனைத்து தனது சுயலாபத்துக்கான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் தட்டிக்கழிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்காக பேரம் பேச கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழ் பேசும் தலைமைகள் அனைவரும் தமது சுய இலாபத்துக்காக தட்டிக்கழித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவ்வாறே என அவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம், பிரேமதாஸா, சந்திரிக்கா, ரணில், மஹிந்த ஆகியோரின் ஆட்சி காலத்தில் பேரம் பேசும் சந்தர்ப்பங்கள் கை கூடி வந்த போதெல்லாம் அவை சுய இலாபத்திற்காக தட்டிக்கழிக்கப்பட்டன.

இதேவேளை, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடு என்பது குடிசைகளிலும், தகர கொட்டகைகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அரண்மனை. எனவே, அந்த மக்கள் சந்தோசமாக வாழவேண்டும்.

அத்துடன், கிடைப்பதனை ஏன் வேண்டாம் என கூற வேண்டும் எனவும் அவர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே, கிடைப்பதனை பெற்றுக்கொள்வோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாவற்குழியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு மிக விரைவில் வீடமைந்து கொடுக்கப்படும். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைத்து கொடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.

இதனிடையே, வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் குறித்து கட்சி தனது நிலைப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.