Breaking News
recent

நல்லெண்ணம் ஒழுக்கம் நாட்டின் மீதான பற்று எளிமை மற்றும் அடக்கம் ஆகியன அனைத்து அரசியல்வாதிகளிடமும் இருக்கவேண்டும் - ஜனாதிபதி



நல்லெண்ணம் ஒழுக்கம் நாட்டின் மீதான பற்று எளிமை மற்றும் அடக்கம் என்பன அனைத்து அரசியல்வாதிகளிடமும் இருக்க வேண்டிய பண்புகள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


களுத்துறையில் நேற்று நடைபெற்ற இந்திரபால அபேவீர விஜேலால் மெண்டிஸ் பாட்டின் சில்வா ஆகியோரின் 28வது நினைவு தின வைபவத்தில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள் நேய மற்றும் மனிதாபிமான பாதையில் பயணிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


கட்சி செயற்பாட்டாளர்களின் குணவியல்புகளுக்கு அமையவே அதன் முன்னேற்றம் தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


நல்லெண்ணம் ஒழுக்கம் நாட்டின் மீதான பற்று எளிமை அடக்கம் என்பன அனைத்து அரசியல்வாதிகளிடமும் இருக்க வேண்டும். ஊழல் மோசடி களவு வீண்விரயம் அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் கட்சியும் அதன் செயற்பாட்டாளர்களும் மக்களால் நிராகரிக்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உபசெயலாளராகவும் களுத்துறை மாவட்ட இணை அமைப்பாளராகவும் பணிபுரிந்த இந்திரபால அபேவீரவும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் விஜேலால் மெண்டிஸ் மற்றும் பாட்டின் சில்வா ஆகியோர் 28 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டனர். எனினும் கட்சிக்காக இவர்கள் ஆற்றிய சேவை கட்சியின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்குமென்றும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.


அனைத்து கட்சிகளும் நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றும் போது அந்தக் காலகட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க முன்வைத்த தொலை இலக்கை புதிய உலகிற்கு ஏற்றவாறு சீர்செய்து பலமான கட்சியாக இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசியல் எதிர்வாதிகள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் நாட்டு மக்கள் தனக்கு வழங்கிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.


தேரர்களுக்கு அகராதியை கையளித்தல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளை வழங்கி வைத்தல் சுகாதார மத்திய நிலையத்திற்கான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் இடம்பெற்றன.


இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ  செய்தி இணையதளம்.

                    நன்றி...
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.