Breaking News
recent

முப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்



அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் முப்பது வருடங்களாக சேவைசெய்த ஊழியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.


பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் முப்பது வருட காலம் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் சேவை செய்த ஊழியர்களுக்கு ஜனாதிபதியினால் தங்க விருதுகள் வழங்கப்பட்டது.


சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ. திசாநாயக்க ஆகியோரால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் பாலித ஜயசேக்கர ஆகியோர் கலந்துகொண்டனர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.