Breaking News
recent

குற்றவாளிகளை பாதுகாக்கின்றது பொலிஸ்படை - வடக்கின் எதிர்கால நிலை?


இன்றை சுழலில் வடக்கில் ஒரு குற்றச்செயல் எத்திசையிலும் நடந்து விட்டாலும் குற்றச்செயல் நடந்து விட்டதென பொதுமக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டவுடன், முதலில் குற்றவாளியாக கருதப்படுபவரை பாதுகாக்க வேண்டும் என்பதிலே பொலிஸார் கவனம் செலுத்துகின்றனர்.

ஏனெனில் சம்பந்தப்படும் குற்றவாளிகளுக்கு பொதுமக்களினால் தண்டனை வழக்கப்பட்டு விடும் எனும் காரணத்தினால் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்.

இதன்படி அண்மையில் வவுனியாவில் வீட்டிற்குள் உறங்கிய இளைஞன் ஒருவரை படுக்கையில் அடித்துக்கொலை செய்யப்பட்டதும், பின்னர் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை படுகொலை செய்த சம்பவம் குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு பொதுமக்களே தகவல் வழங்கியுள்ளனர்.

தகவல் அறிந்ததும் குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு செல்லும் பொலிஸார் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நபரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே முதலில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சட்டப்படி குற்றவாளியாக கருதப்படுபவர் உண்மையில் குற்றவாளியாக நிரூபிக்கும் வரை அந்த நபரை பாதுகாக்க வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது.

குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர் அந்த நபருக்கு நீதிபதி தீர்ப்பினை வழங்குவார்.

ஆனால் இலங்கையின் வடக்கே பொதுமக்கள் குற்றம் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக விரைந்து குற்றவாளிகளை அடையாளம் காணுகின்றனர்.

அதன் பின்னர் தாமே குறித்த நபர்களுக்கு உடனடி தண்டனை வழங்க முனைகின்றனர்.

இதன் காரணத்தினால் குற்றம் நடந்துவிட்டது என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும் குறித்த இடத்திற்கு விரையும் பொலிஸார் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை முதலில் காப்பாற்ற வேண்டும் என்பதிலே அவர்களின் நடவடிக்கை ஆரம்பமாகின்றது.

இந்த நிலையில் வடக்கில் எதிர்காலத்தில் பொதுமக்கள் மத்தியில் பாரிய குற்றங்களை புரியும் நபர்கள், அக்குற்றங்கள் பொதுமக்கள் மத்தில் தெரிய வந்துவிடும்பட்சத்தில் பொதுமக்களிடம் தம்மைப் பாதுகாத்து கொள்ளும் நோக்கத்துடன் தாமே பொலிஸாருக்க தகவலை வழங்கும் நிலை ஏற்படக்கூடுமென கருதப்படுகின்றது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.