Breaking News
recent

கர்ப்பிணி பெண் கொலைச் சம்பவம்! சிறுவனின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு



ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனின் பாதுகாப்புக் கருதி அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை கரம்பன் வீதியில் உள்ள வீடொன்றில் தனித்திருந்த 7 மாத கர்ப்பிணியான கம்சிகா என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய வீட்டு முற்றத்திலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலைச் சம்பவத்தினை நேரில் பார்த்த கண்கண்ட சாட்சியாக மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் உள்ளார் என்று பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த கண்கண்ட சாட்சிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளால் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, சிறுவனை அடுத்த வழக்கு தவணையான எதிர்வரும் 8 ஆம் திகதிவரை, சிறுவர் பாதுகாப்பு பாடசாலையில் அனுமதிக்குமாறு அங்கு கடமையில் இருந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், குறித்த சிறுவன் தனது வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நின்று கொண்டே அடம்பிடித்துள்ளார்.

குறித்த சிறுவனை சமாதனம் செய்து கொள்வதற்கு முயட்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அது பயனளிக்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக பதில் நீதவானின் கவனத்திற்குச் கொண்டுசெல்லப்பட்டது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.