Breaking News
recent

யாழில் ஆர்.ஓ பிளாண்ட் கடற்படை தளபதியால் திறந்து வைப்பு



யாழ்.எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டத்தை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்னவினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றினர்.

இதற்கான கூலியிலேயே இந்த நன்னீராக்கும் திட்டம் எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரு நன்னீராக்கும் திட்டங்களும் 7.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் இலங்கை முழுவதும் 107 இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்.மாவட்டத்தில் 5 இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.