Breaking News
recent

யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயிலுக்கு ஏற்படவிருந்த பேரனர்த்தம்



காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஏற்படவிருந்த பேரனர்த்தம் இன்று அதிகாலை ரயில் சாரதியின் சாதுர்யத்தால் நொடியில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழுவொன்றினால் தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் மற்றுமொறு தண்டவாள துண்டொன்றை குறுக்காக வைத்துள்ளனர். இதன்மூலம் விபத்தொன்றை ஏற்படுத்துவது அவர்கள் நோக்கமாகும்.

இந்த நிலையில் தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதனை உணர்ந்த சாரதி உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த விபத்தை தடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ரயிலின் சாரதி தலாவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.