Breaking News
recent

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது



காணாமல் போனோரின் உறவினர்களினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற வைத்தியர் அடங்கிய விசேட குழு உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை குறித்து ஆராய்ந்ததுடன் மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

இதன்போது, வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் காணப்பட்தனைத் தொடர்ந்து இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் வைத்தியர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.