Breaking News
recent

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை- மேலும் இருவர் கைது..!! (படங்கள்)

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இருவரை நேற்று இரவு(27) யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அன்றைய தினம் np-Daf-8970 வாகனத்தில் ஆடு வாங்குவதற்காக அப்பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த சுஜா(வயது 31) மற்றும் அரபாத்(வயது-35) சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ் நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையில் கறிப்பிட்டள்ளனர்.

இவர்களில் ஒருவர் யாழ் ஐந்து சந்தியில் பீடா கடை நடாத்துவதுடன் தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள்களை விநியோகிப்பவர் என்பவராவார்.

மற்றவர் புத்தளத்தில் இருந்து இவருடன் இவருடன் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதே வேளை மற்றுமொரு முஸ்லீம் நபரும் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்பட்ட நிலையில் இவ்விருவரும் தற்போது கைது செய்யப்பட்டள்ளனர்.


Jaffna Minnal Media

Jaffna Minnal Media

No comments:

Post a Comment

Powered by Blogger.